» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கோவில் அறங்காவலர் குழு தலைவர்கள் தேர்வு
புதன் 12, ஜூலை 2023 3:58:58 PM (IST)

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்து கோவில்களுக்கு திமுக ஆட்சி பொறுப்பேற்றப் பின் தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடியில் பிரசித்திப்பெற்ற தெப்பக்குளம் மாரியம்மன் கோவில், மேலூர் பத்திரகாளியம்மன் கோவில் ஆகிய 2 கோவில்களுக்கு பொறுப்பு அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணையை சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். அதன்படி தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் அறங்காவலர்களாக செல்வசித்ரா அறிவழகன், மகாராஜன், பாலகுருசாமி, மேலூர் பத்திரகாளியம்மன் கோவில் அறங்காலர்களாக கீதா செல்வ மாரியப்பன், மகேஸ்வரன், மஞ்சுளா, ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் வைத்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா தலைமையில் செயல் அலுவலர் குலசை ராமசுப்பிரமணியன், ஆய்வாளர் ருக்மணி ஆகியோர் அடங்கிய குழுக்கள் மூலம் அறங்காவலர் குழு தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் கோவில் அறங்காலர்களாக உள்ள செல்வசித்ரா அறிவழகன், மகாராஜன், பாலகுருசாமி வாக்களித்தனர். அதில் அறங்காவல்குழு தலைவராக செல்வசித்ரா அறிவழகன் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதேபோல், மேலூர் பத்திரகாளியம்மன் கோவிலில் வைத்து நடைபெற்ற தேர்வில் அறங்காலர்களாக உள்ள கீதா செல்வ மாரியப்பன், மகேஸ்வரன், மஞ்சுளா ஆகியோர் வாக்களித்தனர். அதில் அறங்காவல்குழு தலைவராக கீதா செல்வமாரியப்பன் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார். இரு ஆலயங்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்று, பிரசாதங்கள் வழங்கப்பட்டனர். பின்னர் பொறுப்பேற்றுக் கொண்ட அனைவருக்கும் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கோட்டுராஜா, முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் செந்தில்குமார், முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் கந்தசாமி மற்றும் கோபால் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










