» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தாளாளர் கைது!
வெள்ளி 9, ஜூன் 2023 8:17:46 PM (IST)
தென்காசியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கல்லூரியின் தாளாளர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி ஆசாத் நகர் பகுதியில் உள்ள தனியார் பாராமெடிக்கல் கல்லூரியில், சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் தாளாளராக முகமது அன்சாரி உள்ளார். இவர் நேற்று அந்த கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் பயிலும் 17 வயதான 2-ம் ஆண்டு மாணவியை தனது அறைக்கு வரவழைத்து ஆபாசமாக பேசி, தவறாக நடக்க முயன்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிட்டவாறு அந்த அறையில் இருந்து வெளியேறி, தனது வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் தெரிவித்தார். இதுகுறித்த புகாரின்பேரில், குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கல்லூரி தாளாளர் முகமது அன்சாரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










