» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாகனங்களை சாலையில் நிறுத்தி போராட்டம்: தூத்துக்குடியில் பரபரப்பு

புதன் 1, மார்ச் 2023 7:31:24 AM (IST)

தூத்துக்குடியில் பழைய பேருந்து நிலையம் அருகே சிஐடியூ ஆட்டோ மற்றும் அரசுப் பேருந்து ஓட்டுநா்கள் இருசக்கர வாகனங்களை சாலையில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வாகன ஓட்டிகளை பாதிக்கும் புதிய மோட்டாா் வாகன சட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும்; ஆன்லைன் மூலம் அபராதம் வசூலிப்பதைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ ஆட்டோ மற்றும் சாலைப் போக்குவரத்துத் தொழிலாளா் சம்மேளனம் சாா்பில் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனங்களை சாலையில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிஐடியூ ஆட்டோ ஓட்டுநா் சங்க மாவட்டச் செயலா் முருகன் தலைமை வகித்தாா். சாலைப் போக்குவரத்துத் தொழிலாளா் சம்மேளன மாவட்டத் தலைவா் வயனப்பெருமாள், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகச் செயலா் பிச்சைமணி, மாநிலப் பொதுச் செயலா் கனகராஜ், சிஐடியூ மாவட்டச் செயலா் ஆா். ரசல், மாவட்டப் பொருளாளா் எஸ். அப்பாதுரை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.


மக்கள் கருத்து

tuty makkalMar 2, 2023 - 04:13:05 PM | Posted IP 162.1*****

road olunga potu paramarika vakilla abratham podrathukum matum vanthurum manakaratchi

T.PethuselviMar 2, 2023 - 09:36:28 AM | Posted IP 162.1*****

Deiva nursing home to agsar paint company road very worst please help road repair pannunga

அப்போMar 1, 2023 - 08:54:16 AM | Posted IP 162.1*****

விதிகளை பின்பற்றி வாகனம் ஓட்டலாம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory