» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித்தொகை : விண்ணப்பங்கள் வரவேற்பு

செவ்வாய் 12, ஜூலை 2022 3:08:17 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 2022-2023-ஆம் ஆண்டிற்கு மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித் தொகை பெற்றிட விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 1-ம்; வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ரூ.1000/- , 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ரூ.3000/-, 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ரூ.4000/-, இளநிலை கல்விக்கு ரூ.6000/- மற்றும் முதுநிலை கல்விக்கு ரூ.7000/-மும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஒன்பதாம் வகுப்புக்கு மேல் பயிலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகையோடு கூடுதலாக வாசிப்பாளர் உதவித் தொகை 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ரூ.3000/-, இளநிலைகல்விக்கு ரூ.5000/- மற்றும் முதுநிலைகல்விக்கு ரூ.6000/-மும் வாசிப்பாளர் உதவித் தொகை வழங்கப்படுகிறது. 

கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் இவ்வலுவலகத்தில் பெற்று தலைமை ஆசிரியர் அல்லது முதல்வர் அவர்களிடம் ஒப்புதல் பெற்று தேசிய அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், UDID அட்டை நகல், மாணவர் மற்றும் பெற்றோர் / பாதுகாவலர் பெயரில் உள்ள இணை சேமிப்பு கணக்கு வங்கி புத்தக நகல். விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்ட சான்றுகளுடன் இணைத்து மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தூததுக்குடி என்ற முகவரியில் விண்ணப்பிக்குமாறும் மேலும் விபரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண்: 0461-2340626-ல் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிககப்படுகிறது என மாவட்ட ஆட்சியர்  கி.செந்தில்ராஜ்,  தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

Muthu lakshmi. KMar 15, 2025 - 11:32:41 AM | Posted IP 172.7*****

Skin problem since chilhood

Muthu lakshmi. KMar 15, 2025 - 11:30:24 AM | Posted IP 162.1*****

Skin problem since childhood

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education




Arputham Hospital




Thoothukudi Business Directory