» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகள் மீண்டும் திறப்பு : மலர் கொடுத்து மாணவர்களுக்கு வரவேற்பு!

திங்கள் 1, நவம்பர் 2021 10:04:10 AM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் 1½ ஆண்டுகளுக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவர்களை ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர். 

தமிழகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பள்ளிக்கூடங்கள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் திறக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கி உள்ளன. 

தூத்துக்குடி ஜின் பேக்டரி ரோடு மாநகராட்சி பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மாணவ, மாணவிகளை இனிப்பு வழங்கி வரவேற்றார். இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, முதன்மை கல்வி அலுவலர், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 1221 தொடக்கப் பள்ளிகள், 304 நடுநிலைப் பள்ளிகள், 111 உயர்நிலைப் பள்ளிகள், 218 மேல்நிலைப் பள்ளிகள் ஆக மொத்தம் 1854 பள்ளிகள் உள்ளன. மாவட்டத்தில் மொத்தம் சுமார் 3 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 89 ஆயிரத்து 362 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 2 லட்சத்து 10 ஆயிரத்து 638 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 

இவர்கள் அனைவரும் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் பள்ளிக்கு சென்றனர். பின்னர் கரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. அதன்பிறகு ஆன்லைன் மூலமும், கல்வி தொலைக்காட்சி மூலமும் மாணவர்கள் படிப்பை தொடர்ந்து வந்தனர். இந்த நிலையில் 1½ ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்கள் இன்று உற்சாகமாக பள்ளி சென்றனர். 

மேலும், மாணவர்களுக்கு பள்ளிகளில் சந்தோசமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பதால், ஒரு வாரத்துக்கு பாடங்கள் நடத்தக்கூடாது. மாணவர்களுக்கு அதற்கு மாறாக ஆடல் பாடல், பாட்டு போட்டி, கதை கூறுதல் போன்ற கலை இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி, மாணவர்களை தயார்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் பள்ளிகளுக்கு வரும் மாணவர்களை உற்சாகமாக வரவேற்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. 

மலர் கொடுத்து வரவேற்பு 



தூத்துக்குடி சாயர்புரம் அருகே உள்ள தூய மார்டீன் தொடக்க பள்ளியில் தமிழக அரசு உத்தரவின் பேரில் பள்ளி திறக்கபட்டது. பள்ளியில் வருகை தந்த அனைத்து மாணவ மாணவியர்களுக்கு தலைமை ஆசிரியை மரியலீகலா மலர் மற்றும் இனிப்பு வழங்கி வரவேற்றார். இதை தொடர்ந்து சாயர்புரம் சேகரகுரு டேனியல் ஞானப்பிரகாசம் ஜெபம் செய்து துவக்கி வைத்தார். சபை ஊழியர் சாமுவேல் பொன்சிங் ஆசிரியைகள் கிறிஸ்டி பொன்மணி.ஜாக்குலின் சாந்தி பொன்லதா ஆகியோர் பள்ளி மாணவ மாணவியரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இதுபோல் பல்வேறு பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் பூங்கொத்து அளித்து வரவேற்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education


Arputham Hospital






Thoothukudi Business Directory