» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விழாக்களில் 50%பேருக்கு அனுமதி அளிக்க வேண்டும் : ஒலி ஒளி அமைப்பாளர் சங்கம் கோரிக்கை

திங்கள் 19, ஏப்ரல் 2021 4:57:34 PM (IST)



திருமணம் மற்றும் விழாக்களில் 50% பேருக்கு அனுமதி அளிக்க வேண்டும் என தூத்துக்குடி ஒலி ஒளி அமைப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தூத்துக்குடி ஒலி ஒளி அமைப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கு காலத்தில் ஒலி ஒளி அமைப்பாளர்கள் மற்றும் ஊழியர்களின் குடும்பங்கள் தொழில் செய்ய முடியாமல் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

இதனால் வாழ்வாதாரம் இழந்து கடந்த ஆறுமாத காலங்களாக எந்த ஒரு வருமானம் இல்லாமல் தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது மீண்டும் கரோனா பரவுவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில் செய்ய முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே, எங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்திட திருமணம் மற்றும் விழாக்களில் 50% பேருக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam



Thalir Products



Black Forest Cakes



Thoothukudi Business Directory