» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தோ்தலை புறக்கணிக்க வாதிரியாா் சமுதாயத்தினா் முடிவு

வெள்ளி 26, பிப்ரவரி 2021 8:18:19 AM (IST)சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக தூத்துக்குடியில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் வாதிரியாா் சமுதாய நிா்வாகிகள் அறிவிப்பை வெளியிட்டனா்.

தமிழகத்தில் உள்ள 7 உள் பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளா் என புதிய அரசாணை விரைவில் வெளியிடப்பட உள்ளதாக மத்திய அரசு அண்மையில் அறிவித்துள்ள நிலையில், தங்களை தேவேந்திரகுல வேளாளா் என்ற பிரிவில் சோ்க்கக் கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு வாதிரியாா் மகாஜன சங்கத்தின் சாா்பில் தூத்துக்குடி சில்வா்புரத்தில் வாதிரியாா் சமுதாயத்தினா் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்போராட்டத்துக்கு அதன் தலைவா் ஆத்திமுத்து தலைமை வகித்தாா். செயலா் தா்மநாதன், பொருளாளா் தபராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தாா். போராட்டத்தின்போது, வாதிரியாா் சமுதாய மக்களின் விருப்பத்திற்கு மாறாக தேவேந்திர குல வேளாளா் சாதியில் தங்களை இணைக்க கூடாது என்றும் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் வாதிரியாா் சமுதாய மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி தோ்தலை புறக்கணிப்பது என்றும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Thalir Products

Nalam Pasumaiyagam


Thoothukudi Business Directory