» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் இரவு 11 மணி வரை கடைகளை திறக்க அனுமதி : எஸ்.பி.,க்கு வியாபாரிகள் நன்றி

புதன் 24, பிப்ரவரி 2021 4:38:39 PM (IST)

தூத்துக்குடியில் இரவு 11 மணி வரை கடைகளைத் திறந்து வைக்க அனுமதி அளித்த எஸ்.பி.,க்கு வியாபாரிகள் நன்றி தெரிவித்துள்ளனர். 

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் இரவு 11 மணி வரை கடைகளைத் திறந்து வைக்க அனுமதி தரும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மத்திய மாவட்டத்தின் சார்பாக   மாவட்டத் தலைவர் சோலையப்ப ராஜா, மாவட்டச் செயலாளர் மகேஷ்வரன், மாவட்டப் பொருளாளர் ஆனந்த பொன்ராஜ், மாநில துனைத் தலைவர் வெற்றிவேல், செய்தித் தொடர்பாளர் எஸ்.செந்தில்முருகன் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர். 

வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இரவு 11 மணி வரை கடைகளைத் திறக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அனுமதி அளித்துள்ளார். இதையடுத்து எஸ்பிக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி மத்திய மாவட்டம் மற்றும் கிளைச்  சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes


Nalam PasumaiyagamThalir ProductsThoothukudi Business Directory