» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சீனாவில் பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து – 21 பேர் பலி; 61 பேர் படுகாயம்!

செவ்வாய் 5, மே 2026 11:14:44 AM (IST)

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்தனர். மேலும் 61 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவின் ஹுனான் மாகாணத்தின் தலைநகரான சாங்ஷாவிற்கு உட்பட்ட லியுயாங் (Liuyang) நகரம், உலகின் மிக முக்கிய பட்டாசு உற்பத்தி மையமாகக் கருதப்படுகிறது. இங்குள்ள 'ஹுவாஷெங் (Huasheng) பட்டாசு உற்பத்தி மற்றும் காட்சிப்படுத்துதல்' தொழிற்சாலையில் நேற்று (மே 4, 2024) மாலை சுமார் 4:43 மணியளவில் எதிர்பாராத விதமாக வெடிவிபத்து ஏற்பட்டது.

வெடிவிபத்தின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்ததால், தொழிற்சாலையின் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானதுடன், அப்பகுதி முழுவதும் அடர்ந்த புகைமூட்டமாகக் காணப்பட்டது. இடிபாடுகளில் சிக்கி இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். 61 பேர் படுகாயமடைந்துள்ளனர்; அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

சுமார் 480-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மற்றும் 3 மீட்பு ரோபோக்கள்  தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. விபத்து நடந்த இடத்திற்கு அருகிலேயே இரண்டு வெடிமருந்து கிடங்குகள் இருந்ததால், இரண்டாவது விபத்து ஏற்படாமல் தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். பாதுகாப்பு காரணங்களுக்காக, தொழிற்சாலையைச் சுற்றியுள்ள 3 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்கள் அனைவரும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து அதிபர் ஷி ஜின்பிங் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார். விபத்து நடந்த தொழிற்சாலையின் நிர்வாகிகளைப் போலீசார் கைது செய்துள்ளனர். பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டதா என்பது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

லியுயாங் நகரம், சீனாவில் விற்பனையாகும் பட்டாசுகளில் 60 சதவீதத்தையும், உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பட்டாசுகளில் 70 சதவீதத்தையும் உற்பத்தி செய்வது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital






Thoothukudi Business Directory