» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கமேனியின் இறுதிச் சடங்கு: பிரதமர் மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியான் அழைப்பு!

புதன் 24, ஜூன் 2026 4:29:35 PM (IST)



ஈரானிய மதகுருவும் உச்சத் தலைவருமான அலி அயத்துல்லா கமேனியின் இறுதிச் சடங்கு நிகழ்வுகளில் பங்கேற்குமாறு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் அதிபர் மசூத் பெஷேஷ்கியான் அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய கூட்டு வான்வழித் தாக்குதலில், ஈரானின் உச்சத் தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அவரது இறுதிச்சடங்கு மற்றும் உடல் அடக்கம் செய்வதற்கான அதிகாரப்பூர்வ கால அட்டவணையை ஈரான் அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. 

அதன்படி, கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் வரும் ஜூலை 4-ஆம் தேதி தலைநகர் தெஹ்ரானில் தொடங்கி, ஜூலை 9-ஆம் தேதி அவரது சொந்த ஊரான வடகிழக்கு புனித நகரமான மஷாத்தில் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது. ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் தெஹ்ரானில் பிரியாவிடை நிகழ்வுகளும், ஜூலை 6 அன்று இறுதி ஊர்வலமும் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜூலை 7 அன்று புனித நகரான கோமில் சிறப்புத் தொழுகையும், ஜூலை 9 அன்று மஷாத்தில் உள்ள புகழ்பெற்ற இமாம் ரெசா நினைவிடத்தில் அவரது உடல் நல்லடக்கமும் செய்யப்படவுள்ளது. 

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இறுதி நிகழ்வுகளில் சுமார் 1.5 கோடி முதல் 2 கோடி மக்கள் வரை கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கும் ஈரான் அரசு முறைப்படி அழைப்பு விடுத்து வருகிறது.
 
கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் ஈரானின் முன்னாள் அதிபர் இப்ராகிம் ரைசி பலியானபோது, புதுதில்லியில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு இந்தியாவில் அரசுமுறைத் துக்கம் அனுசரிக்கப்பட்டது. மேலும், அவரது இறுதிச்சடங்கில் இந்தியாவின் சார்பில் அப்போதைய குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் நேரில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வில் இந்தியாவின் சார்பில் பிரதமர் மோடி அல்லது முக்கியப் பிரதிநிதிகள் யார் பங்கேற்கப்போகிறார்கள் என்ற அதிகாரப்பூர்வ விவரம் இதுவரை வெளியாகவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory