» செய்திகள் - விளையாட்டு » உலகம்
வெறும் காகிதப் புலிகள்: அமெரிக்காவின் முற்றுகை மிரட்டலுக்கு உச்ச தலைவர் கடும் எச்சரிக்கை!
சனி 2, மே 2026 11:42:48 AM (IST)
மேற்காசியப் பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் வெறும் காகிதப் புலிகள் என்றும், அவற்றால் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள முடியாது என்றும் ஈரானின் புதிய உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா காமேனி கடுமையாகச் சாடியுள்ளார்.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் 2,000-க்கும் மேற்பட்ட ஈரானியர்கள் கொல்லப்பட்டனர். 40 நாட்கள் நீடித்த இந்த மோதல், ஏப்ரல் 8-ம் தேதி அறிவிக்கப்பட்ட இரு வார கால போர் நிறுத்தத்திற்குப் பிறகு சற்று தணிந்தது.
நிரந்தர அமைதியை ஏற்படுத்த பாகிஸ்தானில் 21 மணிநேரம் நடைபெற்ற முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை உடன்பாடு ஏதுமின்றித் தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து, ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடப் போவதாகவும், பொருளாதாரத் தடைகள் நீடிக்கும் என்றும் அமெரிக்கா அறிவித்ததால் மேற்காசியாவில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன.
இந்தச் சூழலில், 'எக்ஸ்' (X) வலைதளத்தில் பதிவிட்டுள்ள உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி, அமெரிக்காவுக்கு ஆதரவாகச் செயல்பட்ட இஸ்ரேல் மற்றும் சில அரபு நாடுகளைச் சுட்டிக்காட்டி அமெரிக்கப் படைகளின் பலவீனத்தை விமர்சித்துள்ளார். சமீபத்தில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் அமெரிக்கத் தளங்களைத் துல்லியமாகத் தாக்கியதை அவர் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.
பாரசீக வளைகுடா குறித்து: மற்றொரு பதிவில், "பாரசீக வளைகுடா என்பது வெறும் கடல் நீர் மட்டுமல்ல; அது எங்கள் அடையாளம், நாகரீகம் மற்றும் உலகப் பொருளாதாரத்தின் முக்கிய வழித்தடம்" என அதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கமேனியின் இறுதிச் சடங்கு: பிரதமர் மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியான் அழைப்பு!
புதன் 24, ஜூன் 2026 4:29:35 PM (IST)

இந்திய வங்கிக்கு வட்டியுடன் ரூ.100 கோடி செலுத்த நீரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் உத்தரவு!
புதன் 24, ஜூன் 2026 11:57:40 AM (IST)

கத்தார் எரிவாயு ஆலையில் பயங்கர வெடிவிபத்து : 12 இந்தியர்கள் உட்பட 13 பேர் பலி!
செவ்வாய் 23, ஜூன் 2026 12:42:28 PM (IST)

அமெரிக்கா - இத்தாலி தலைவர்கள் இடையே மோதல் முற்றியது: டிரம்ப் பேச்சுக்கு மெலோனி பதிலடி!
திங்கள் 22, ஜூன் 2026 11:00:35 AM (IST)

ஈரானில் பிரபல பாடகிக்கு 74 சவுக்கடிகள் தண்டனை : மனித உரிமை அமைப்புகள் கண்டனம்!
சனி 20, ஜூன் 2026 5:37:38 PM (IST)

ஒப்பந்தத்தை மீறினால் குண்டுவீச்சு நடத்துவோம்: ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!
வெள்ளி 19, ஜூன் 2026 4:32:35 PM (IST)








