» செய்திகள் - விளையாட்டு » உலகம்
மீண்டும் ஒரு கொலை முயற்சி: வாஷிங்டனில் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு; மர்ம நபர் கைது!
திங்கள் 27, ஏப்ரல் 2026 9:29:32 AM (IST)

வாஷிங்டனில் பத்திரிகையாளர்கள் சங்க இரவு விருந்து நிகழ்ச்சியில், அதிபர் டொனால்ட் டிரம்ப்பை குறிவைத்துத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தாக்குதல் நடத்திய கலிபோர்னிய வாலிபரைப் போலீசார் கைது செய்தனர்.
வாஷிங்டன் ஹில்டன் நட்சத்திர ஓட்டலில் நேற்று இரவு வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் சிறப்பு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜனாதிபதி டிரம்ப், அவரது மனைவி மெலனியா டிரம்ப், துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் மற்றும் முக்கிய அதிகாரிகள் உட்பட சுமார் 2,600 பேர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. சுமார் 8 முறை துப்பாக்கி முழங்கியதால் அங்கு இருந்தவர்கள் பீதியடைந்து மேஜைகளுக்கு அடியில் தஞ்சம் புகுந்தனர்.
துப்பாக்கிச்சூடு தொடங்கிய உடனே பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு, மேடையில் இருந்த டிரம்ப் மற்றும் மெலனியாவைச் சூழ்ந்து கொண்டு பாதுகாப்பாக வெளியேற்றினர். இந்தத் தாக்குதலில் ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓட்டல் வளாகம் முழுவதும் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்தத் தாக்குதலை நடத்திய வாலிபரைப் பாதுகாப்புப் படையினர் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். விசாரணையில் அவர் கலிபோர்னியாவின் டொரன்ஸ் நகரைச் சேர்ந்த கோல் டோமஸ் ஆலன் என்பது தெரியவந்தது. தாக்குதலின் போது தடுத்த போலீஸ்காரர் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது, எனினும் அவர் காயமின்றி உயிர் தப்பினார்.
4-வது முறை கொலை முயற்சி:
டிரம்ப் மீது நடத்தப்படும் 4-வது கொலை முயற்சி இதுவாகும்:
ஜூலை 13, 2024: பென்சில்வேனியா பிரசார கூட்டத்தில் காதில் காயம் ஏற்பட்டது.
செப்டம்பர் 2024: புளோரிடா கோல்ப் கிளப்பில் கொலை முயற்சி.
அக்டோபர் 14, 2024: 3-வது முறையாகக் கொல்ல முயற்சி.
தற்போது: வாஷிங்டன் விருந்து நிகழ்ச்சியில் 4-வது முறையாகத் தாக்குதல்.
விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடந்தபோது நிலவிய பதற்றமான காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஜனாதிபதி மீதான இந்தத் தொடர் தாக்குதல்கள் அமெரிக்கப் பாதுகாப்புத் துறைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. வாஷிங்டன் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்காவில் ‘எச்-1பி’ விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை: இந்திய ஐ.டி. ஊழியர்கள் அதிர்ச்சி!
ஞாயிறு 26, ஏப்ரல் 2026 9:36:25 AM (IST)

போருக்குப் பின் இயல்பு நிலைக்குத் திரும்பும் ஈரான்: மீண்டும் சர்வதேச விமானங்கள் இயக்கம்!
சனி 25, ஏப்ரல் 2026 5:45:45 PM (IST)

ஈரான் உடனான 2ஆம் கட்ட அமைதிப்பேச்சுவார்த்தை : அமெரிக்க துணை அதிபர் பங்கேற்கவில்லை
சனி 25, ஏப்ரல் 2026 12:03:38 PM (IST)

ஈரான் மீது அணு ஆயுதம் பயன்படுத்த மாட்டேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
வெள்ளி 24, ஏப்ரல் 2026 5:00:28 PM (IST)

இந்தியா - நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: ஏப். 27-ல் கையெழுத்தாகிறது
வெள்ளி 24, ஏப்ரல் 2026 12:14:18 PM (IST)

இந்தியர்களுக்கு இனி விசா தேவையில்லை: பிரான்ஸ் அரசு அறிவிப்பு
வெள்ளி 24, ஏப்ரல் 2026 11:17:03 AM (IST)








