» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பூமியை நோக்கி வேகமாக வரும் 2 எரிகற்கள்: தொடர் கண்காணிப்பில் நாசா!!

சனி 4, மே 2024 4:34:10 PM (IST)

விண்வெளியிலிருந்து இரண்டு எரிகற்கள் பூமியை மிக அருகில் நெருங்கி வருவதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, இவ்விரண்டு எரிகற்களும் வெவ்வேறு கூட்டத்திலிருந்து வருவதாகவும், வெவ்வேறு வேகத்தில் வந்துகொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த எரிகற்களால் பூமிக்கு ஆபத்து ஏற்படுமா? என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் நாசா விவரித்துள்ளது.

முதல் எரிகல்லுக்கு இந்த ஆண்டின் எண்ணுடன் சேர்த்து எச்கே1 என்று பெயரிடப்பட்டுள்ளது. இது அப்பல்லோ எரிகல் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் சுற்றுவட்டப்பாதை பூமியின் பாதையை அவ்வப்போது குறுக்காக கடந்துசெல்வது வழக்கம். இது கிட்டத்தட்ட 99 அடி (30.14 மீட்டர்கள்) நீளம்கொண்டது. தோராயமாகச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு வணிக விமானம் அளவுக்கு பெரியதாக இருக்குமாம்.

அளவில் மிகப்பெரியதுதான் என்றாலும் இது பூமிக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என்று நாசா விளக்கம் கொடுத்துள்ளது. மே 4ஆம் தேதி இந்த விண்கல் பூமியை மணிக்கு 31,114 கிலோ மீட்டர் வேகத்தில் கடக்கவிருக்கிறது. நல்வாய்ப்பாக இந்த எரிகல்லுக்கும் பூமிக்கும்இடையில் கிட்டத்தட்ட 6,88,896 கிலோ மீட்டர் தொலைவு உள்ளது. இது தோராயமாக பூமிக்கும் நிலவுக்கும் உள்ள இடைவெளியை விட 1.8 மடங்கு அதிகமாகும்.

இரண்டாவது எரிகல்லுக்கு 2024 ஜேஇ என பெயரிடப்பட்டுள்ளது. இது அமோர் எரிகல் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது அப்போல்லோ குழு எரிகல்லைப் போல அல்லாமல், அமோர்ஸ் எரிகல், பூமியின் வட்டப்பாதையிலிருந்து வெளியிலிருந்து வந்துகொண்டிருக்கிறது. இதன் அளவு 165 அடி (50 மீட்டர்) என கணக்கிடப்பட்டுள்ளது. இதுஅளவிலும் மிகப்பெரியதாகவே உள்ளது. மணிக்கு 27,926 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்து வருகிறது. இதுவும் மே 4ஆம் தேதி பூமியைக் கடக்கிறது. 

இது அளவில் மிகப்பெரியதாக இருந்தாலும், பூமியை விட தொலைவில் கடந்து செல்வதால் ஆபத்து இருக்காது என்று கணிக்கப்பட்டுள்ளது. நாசா தொடர்ந்து எரிகற்களை கண்காணித்து வருகிறது. பூமிக்கு ஏதேனும் அச்சுறுத்தலை ஏற்படுத்துமோ என்று எப்போதும் கண்காணிப்பிலேயே இருக்கும். வழக்கமாக 140 மீட்டரை விட பெரிய எரிகற்கள்தான் பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்துமாம். அதுவும் பூமியின் வட்டப்பாதைக்குள் வந்தால்தானாம். நல்லவேலையாக, 2024 எச்கே 1 மற்றும் ஜேஇ இரண்டுமே புவி வட்டப்பாதைக்குள் வெளியே செல்கின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory