» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

புல்வாமா தாக்குதல் நினைவு தினம்: வீரர்களை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி

சனி 14, பிப்ரவரி 2026 12:36:55 PM (IST)

புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு உயிரைத் தியாகம் செய்த துணிச்சலான வீரர்களை நினைவு கூறுவதாக பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவு நாள் இன்று (14-02-2026) அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு இதே நாளில் ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு வீரர்களை ஏற்றிக்கொண்டு சென்ற ராணுவ வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த துயர சம்பவத்தில் 40 சி.ஆ.ர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில் இன்று புல்வாமா தாக்குதல் நினைவு நாளையொட்டி பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: 2019ம் ஆண்டு இதே நாளில் புல்வாமாவில் தங்கள் இன்னுயிரை ஈந்த துணிச்சலான வீரர்களை நினைவு கூர்கிறேன். அவர்களின் பக்தி, உறுதிப்பாடு மற்றும் தேசத்திற்கான சேவை நம் உணர்வில் என்றென்றும் பதிந்திருக்கும். ஒவ்வொரு இந்தியர்களும் அவர்களின் துணிச்சலை கண்டு உத்வேகம் பெறுகின்றனர். இவ்வாறு பிரதமர் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education



Arputham Hospital





Thoothukudi Business Directory