» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி தனிநபர் தீர்மானம் தாக்கல்!

வியாழன் 12, பிப்ரவரி 2026 3:30:42 PM (IST)



மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி, பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே தனிநபர் தீர்மான நோட்டீஸைத் தாக்கல் செய்துள்ளார். 

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக மக்களவையில் கடந்த புதன்கிழமை உரையாற்றிய ராகுல் காந்தி, 'எப்ஸ்டீன்' (Epstein) கோப்புகளுடன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரியைத் தொடர்புபடுத்திப் பேசினார். பிரதமர் மோடி நாட்டையும், பாரத மாதாவையும் அடகு வைத்துவிட்டதாக ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

ராகுல் காந்தியின் இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று மத்திய அரசு மறுத்துள்ளது. முறையான முன்னறிவிப்பின்றி இத்தகைய புகார்களை அவையில் முன்வைத்ததற்காக, ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்யப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழலில், ராகுல் காந்தியைப் பதவி நீக்கம் செய்யக் கோரி மக்களவைச் செயலகத்தில் நிஷிகாந்த் துபே மனு அளித்துள்ளார். இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அவர்: "நாட்டைத் துண்டாட நினைப்பவர்களிடம் இருந்து ராகுல் காந்திக்கு நிதி வருகிறதா? இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத புத்தகம் அவருக்கு எப்படிக் கிடைத்தது? இதன் பின்னணியில் உள்ள சதி என்ன?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கிடையே, முன்னாள் ராணுவத் தளபதி நரவணே எழுதிய, இன்னும் வெளியாகாத புத்தகம் சட்டவிரோதமாகப் புழக்கத்திற்கு வந்தது குறித்து டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education


Arputham Hospital




Thoothukudi Business Directory