» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியா உற்பத்தி செய்வதை உலக நாடுகள் விரும்பவில்லை: அனில் தகவல் பேச்சு!

வியாழன் 12, பிப்ரவரி 2026 11:30:14 AM (IST)

இந்​தியா உற்​பத்தி துறை​யில் முன்​னேறு​வதை எதிர்க்​கும் சக்திகளை தடுத்​துப் போராட வேண்​டும் என்று வேதாந்தா குழு​ம தலை​வர் அனில் அகர்​வால் கூறினார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: "இந்​தியா உற்​பத்தி செய்​வதை உலக நாடு​கள் விரும்​ப​வில்​லை. ஆனால், உள்​நாட்டு உற்​பத்தி மட்​டுமே வேலை ​வாய்ப்​பு​களை உரு​வாக்​கும் என்​பது உலகின் பிற பகு​தி​களில் நிரூபிக்​கப்​பட்​டுள்​ளது.இந்​தியா உற்​பத்தி துறை​யில் முன்​னேறு​வதை எதிர்க்​கும் சக்திகளை தடுத்​துப் போராட வேண்​டும். ஒரு காலத்​தில் உணவுக்காக இறக்​கும​தியை நம்​பி​யிருந்த நாடு, இன்று அதில் தன்னிறைவு பெற்​றுள்​ளது. அரசு உரு​வாக்​கிய ஒரு மக்​கள் இயக்கத்​தால் மட்டுமே இது சாத்​தி​ய​மானது.

இது​போல இப்​போது இந்​தியா தனது கச்சா எண்​ணெய் மற்​றும் எரி​வாயு தேவை​யில் 90 சதவீதத்தை இறக்​குமதி செய்​வ​தால் பலவீன​மான நிலை​யில் உள்​ளது. எனவே, உள்​நாட்டு உற்பத்தியை அதி​கரிப்​ப​தைத் தவிர வேறு வழி​யில்​லை. இந்தியாவுக்​குத் தேவை​யான வளங்​களும், திறமை​யான தொழில்​ முனைவோர்களும் உள்​ளனர். நமக்​குத் தேவை​யானது விரி​வான ஆய்​வு​கள் மட்​டுமே. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education





Arputham Hospital



Thoothukudi Business Directory