» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வங்கதேசத்துக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் : தாரிக் ரஹ்மானுக்கு மோடி வாழ்த்து!

வெள்ளி 13, பிப்ரவரி 2026 12:44:16 PM (IST)



வங்கதேச பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள வங்கதேச தேசியவாதக் கட்சியின் (பிஎன்பி) தலைவர் தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வங்கதேச பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை மாலை முடிவடைந்தவுடன், எண்ணிக்கை தொடங்கியது. மொத்தமுள்ள 299 தொகுதிகளில் பிஎன்பி கட்சி 212 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் பிஎன்பி கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

இந்த நிலையில், வங்கதேசத்தில் புதிதாக அமையவுள்ள அரசுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.பிரதமர் மோடி தெரிவித்திருப்பதாவது: வங்கதேச பொதுத் தேர்தலில், வங்கதேச தேசியவாதக் கட்சியைத் தீர்க்கமான வெற்றிக்கு அழைத்துச் சென்ற தாரிக் ரஹ்மானுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வெற்றியானது, வங்கதேச மக்கள் உங்கள் தலைமை மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது.ஜனநாயகம், முற்போக்கு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வங்கதேசத்துக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும். நமது பன்முக உறவுகளை வலுப்படுத்தவும், நமது பொதுவான வளர்ச்சி இலக்குகளை அடையவும் உங்களுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital



CSC Computer Education






Thoothukudi Business Directory