» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஏப்ரல் 16-ம் தேதி நாடாளுமன்ற தேர்தலா? இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம்!

செவ்வாய் 23, ஜனவரி 2024 5:55:30 PM (IST)

நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கு 7 அல்லது 9 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கும் உத்தேச தேதியை தேர்தல் ஆணையம் வெளியிட்டதாகவும், ஏப்ரல் மாதம் 16-ந்தேதிக்கு ஏற்றவாறு தேர்தல் சார்ந்த திட்டங்களை வகுக்கும்படி மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியதாகவும் இன்று மதியம் தகவல் வெளியானது.

டெல்லியில் உள்ள மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பிய சுற்றறிக்கையை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகின. சுற்றறிக்கையில் உள்ள தேதி தேர்தலுக்கான உத்தேச தேதிதானா? என்ற கேள்வும் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. 

இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தகவல் வருமாறு: சுற்றறிக்கையை குறிப்பிட்டு தேர்தல் தொடங்கும் உத்தேச நாள்தானா? என்பதை தெளிவுபடுத்தும்படி சில ஊடக கேள்விகள் வருகின்றன. தலைமை தேர்தல் ஆணையத்தின் தேர்தல் திட்டமிடலின்படி அதிகாரிகள் தங்கள் பணிகளை திட்டமிட்டு செய்து முடிப்பதற்கு மட்டுமே இந்த உத்தேச தேதி குறிப்பிடப்பட்டுள்ளது என சுற்றறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory