» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தங்கம், வெள்ளி நகைகளுக்கான பகுதி பொருட்களின் இறக்குமதி வரி உயர்வு

செவ்வாய் 23, ஜனவரி 2024 4:42:36 PM (IST)

நகைகளின் ஒரு பகுதியாக உள்ள கொக்கி, திருகாணி உள்ளிட்ட சிறிய பொருட்கள் மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்களுக்கான நாணயங்கள் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரியை மத்திய நிதி அமைச்சகம் உயர்த்தி உள்ளது.

இதுபற்றி நிதி அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், தங்கம், வெள்ளி மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்களுக்கான நாணயங்கள் மீது விதிக்கப்பட்ட இறக்குமதி வரியானது தற்போதுள்ள 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் ஆக உயர்த்தப்படுகிறது என அறிவித்து உள்ளது.

இதன்படி, தங்கம், வெள்ளி மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்களுக்கான நாணயங்கள் மீது விதிக்கப்பட கூடிய இறக்குமதி வரியானது இனி, 15 சதவீதம் என்ற அளவில் இருக்கும். இதில் அடிப்படை சுங்க வரி 10 சதவீதம் அளவில் இருக்கும். 5 சதவீதம் வேளாண் உட்கட்டமைப்பு மேம்பாட்டு வரியாக இருக்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கின்றது. இவற்றுக்கு கூடுதல் வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று, விலைமதிப்பற்ற உலோகங்கள் அடங்கிய வினையூக்கிகள் மீதும் இறக்குமதி வரியானது 14.35 சதவீதம் வரை உயர்த்தி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, அடிப்படை சுங்க வரி 10 சதவீதம் என்ற அளவிலும், 4.35 சதவீதம் வேளாண் உட்கட்டமைப்பு மேம்பாட்டு வரியாகவும் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இவற்றுக்கு கூடுதல் வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய வரி விகிதங்கள் ஜனவரி 22-ந்தேதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றும் அறிவிப்பு வெளிவந்து உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory