» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

3 மணி நேரத்திற்கு மேல் தாமதமானால் விமான சேவை ரத்து: மத்திய அரசு உத்தரவு!

புதன் 17, ஜனவரி 2024 8:24:01 AM (IST)

3 மணி நேரத்திற்கு மேல் தாமதமானால் விமான சேவையை ரத்து செய்ய வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பனிப்பொழிவு காரணமாக விமானங்களை இயக்க 3 மணி நேரத்திற்கு மேல் தாமதமாகும் நிலை ஏற்பட்டால் சேவையை ரத்து செய்யுமாறு விமான நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லி, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் சில தினங்களாக கடும் பனிப்பொழிவால் விமான சேவை ரத்து செய்வதுடன் சாலைகளிலும் விபத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் பனிப்பொழிவு காரணமாக 3 மணி நேரத்திற்கும் மேல் தாமதமாகும் விமானங்களை ரத்து செய்யுமாறு விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

விமானம் புறப்படும் நேரம் தாமதமானால் அது குறித்து உடனுக்குடன் வாட்ஸ் அப், விமான நிறுவனத்தின் இணையதளம், குறுஞ்செய்தி ஆகியவை மூலம் பயணிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான சேவை ரத்து செய்யப்படும் சூழல் ஏற்பட்டால் அது குறித்து முன்கூட்டியே பயணிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் இந்த புதிய நடைமுறைகளை அனைத்து விமான நிறுவனங்களும் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

Maththiya arasuJan 17, 2024 - 11:13:25 AM | Posted IP 162.1*****

Asiriyar avargale maththiya arasu endru seythi podavum...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory