» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தமிழக மீனவர்கள் சுருக்குமடி வலைகளை பயன்படுத்த இடைக்கால அனுமதி!

செவ்வாய் 24, ஜனவரி 2023 11:25:00 AM (IST)

தமிழக மீனவர்கள் வாரத்தில் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டும் சுருக்குமடி வலையைப் பயன்படுத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சுருக்குமடி வலைகளுக்குத் தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மீனவர்கள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, வாரத்தில் இரண்டு நாள்கள் அதாவது திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் கடலில், 12 கடல் மைல்களுக்கு அப்பால் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுளள்து.

மேலும், பதிவு செய்யப்பட்ட படகுகள் மட்டுமே சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். மீனவர்கள் தங்களது படகுகளில் உரிய டிராக்கிங் சிஸ்டம் கருவியைப் பொருத்தியிறுக்க வேண்டும்.  நாட்டுப் படகு மீனவர்களும் விசைப்படகு மீனவர்களும் சமமான பலனைப் பெற வேண்டும் என்பதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory