» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாடாளுமன்ற தேர்தல் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: கேரளாவில் 4 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

வெள்ளி 26, ஏப்ரல் 2024 4:59:06 PM (IST)



கேரளாவில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது 4 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர்.

நாடாளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகிறார்கள். 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், கேரளாவில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது 4 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். 

பாலக்காடு, கோழிக்கோடு, ஆலப்புழா, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. பாலக்காடு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒட்டப்பாலம் அருகே உள்ள சுனாங்காட்டைச் சேர்ந்த சந்திரன் (68) என்பவர் வாணி விலாசினி பள்ளி வாக்குச்சாவடியில் காலை 7.30 மணியளவில் வாக்களித்துவிட்டு வெளியே வந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனே அருகில் நின்றவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கோழிக்கோடு நகர வாக்குச்சாவடி எண் 16-ஐ சேர்ந்த இடது ஜனநாயக முன்னணியின் (எல்டிஎப்) பூத் ஏஜெண்டான அனீஸ் அகமது (66) காலை 8 மணியளவில் வாக்குப்பதிவின்போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனால் சில நிமிடங்களுக்கு தேர்தல் பணிகள் நிறுத்தப்பட்டது.

ஆலப்புழா தொகுதியின் காக்காஜோம் சுசாந்த் பவனில் வசிக்கும் சோமராஜன் (70) என்ற முதியவர் ஆலப்புழாவில் உள்ள அம்பலப்புழாவில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்த வரிசையில் நின்றபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

மலப்புரம் மாவட்டம் திரூரைச் சேர்ந்த ஆசிரியர் சித்திக் (63) என்பவர் நிறைமருதூர் அருகே உள்ள வல்லிக்கஞ்சிரம் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory