» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தாஜ்மகாலில் 22 அறைகளை திறக்க கோரிய மனு தள்ளுபடி: மனுதாரருக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!

வெள்ளி 13, மே 2022 4:59:46 PM (IST)

தாஜ்மகாலில் 22 அறைகளை திறக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து  அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

17-ம் நூற்றாண்டின் முகலாய மன்னர் ஷாஜகானால் சலவைக்கற்கள் கொண்டு கட்டப்பட்ட தாஜ்மகால் உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. இதற்கிடையே, தாஜ்மகாலில் மூடப்பட்ட 22 அறைகளின் கதவுகளைத் திறக்க தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி ரஜனீஷ் சிங் என்பவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்..
 
மனுவில், தாஜ்மகால் கட்டிடம் ஒரு சிவன்கோவில். அது பற்றிய உண்மையைக் கண்டறிய ஒரு குழுவை அமைக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்நிலையில், இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது மனுதாரரின் கோரிக்கைகளை ஏற்க மறுத்த நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்தனர். மேலும் ரகசிய அறைகளில் இந்து கடவுள் இருப்பதாக கூறி வழக்கு தொடுத்த மனுதாரருக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory