» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அசானி புயல் இன்று இரவு ஒடிசாவை நெருங்குகிறது- கொல்கத்தா, அவுராவில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

செவ்வாய் 10, மே 2022 4:30:18 PM (IST)

அசானி புயலானது இன்று இரவு வடக்கு ஆந்திர கடலோர பகுதியை நெருங்கி ஒடிசா கடலோரத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கக்கடலில் அந்தமான் அருகில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னர் புயலாகவும் உருமாறியுள்ளது. இந்த புயலுக்கு அசானி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அசானி புயலானது தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருகிறது. ஆந்திர மாநிலம் காக்கிநாடாவிற்கு தென்கிழக்கு 300 கி.மீ. தூரத்திலும், விசாகப்பட்டினத்திற்கு தெற்கு தென்கிழக்கே 330 கி.மீ தொலைவிலும் கோபால்பூருக்கு தென்மேற்கே 510 கி.மீ தொலைவிலும் இது மையம் கொண்டுள்ளது.

இது ஆந்திரா, ஒடிசா கடல் பகுதியை நோக்கி 105 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று இரவு அசானி புயல் வடக்கு ஆந்திர கடலோர பகுதியை நெருங்கி ஒடிசா கடலோரத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது படிப்படியாக வடக்கு ஆந்திரா, ஒடிசா கடலோர பகுதியை நெருங்கும் வாய்ப்பு உள்ளது என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதுகுறித்து வானிலை அதிகாரிகள் கூறியதாவது: தீவிர புயலானது அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக வலுவிழக்கிறது. இது ஆந்திரா, ஒடிசா கடல் பகுதியிலேயே மையம் கொண்டுள்ளது. இது படிப்படியாக வலுவிழக்கக் கூடும். இதன் காரணமாக ஆந்திரா, ஒடிசாவில் கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்திலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் மேற்கு மத்திய கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் சூறாவளி காற்று பலமாக வீசக்கூடும் என்பதால் 2 நாட்களாக மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் மசூலிப்பட்டணம் முதல் காக்கிநாடா, ஏனாம், விசாகப்பட்டினம் வரை கடலோரம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. தீவிர புயலாக உள்ள அசானி ஆந்திரா மற்றும் ஒடிசாவையொட்டிய கடற்கரை பகுதியை நெருங்கும்.பின்னர் வடகிழக்கில் திரும்பி ஒடிசா கடற்கரையை நெருங்கும். இதனால் ஆந்திராவில் சில பகுதிகளில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும். கொல்கத்தா, அவுராவில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory