» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிஎஸ்எஃப் அதிகார வரம்பு விரிவாக்கத்துக்கு எதிராக மேற்கு வங்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

செவ்வாய் 16, நவம்பர் 2021 5:38:55 PM (IST)

எல்லைப் பாதுகாப்புப் படை அதிகார வரம்பு விரிவாக்கத்துக்கு எதிராக மேற்கு வங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சர்வதேச எல்லைகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகாரவரம்பானது 15 கி.மீ. இருந்து 50 கி.மீ. ஆக அதிகரிக்கப்படுவதாக கடந்த அக்டோபர் 13ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. இந்த அறிவிப்பிற்கு எதிராக எல்லையோர மாநிலங்களான பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில அரசுகள், மாநில உரிமைகள் பறிக்கப்படுவதாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

மேலும், இந்த அறிவிப்பு மாநில சட்டங்கள், காவல்துறைக்கு இடையூறாக அமையும் எனவும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று மேற்கு வங்க சட்டப்பேரவையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நவம்பர் 22ஆம் தேதி தில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இந்த விவகாரம் தொடர்பாக பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மக்கள் கருத்து

samiNov 25, 2021 - 06:24:05 PM | Posted IP 49.20*****

Dear PM- Kindly eradicate this stupid

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory