» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காற்று மாசை கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அமல்படுத்த தயார்: டெல்லி அரசு

திங்கள் 15, நவம்பர் 2021 12:14:16 PM (IST)



காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த டெல்லியில் முழுப் பொதுமுடக்கத்தை அமல்படுத்த தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் டெல்லி அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகளவிலான வாகனங்கள் இயக்குவதால் மற்றும் பயிர்க்கழிவுகளை எரிப்பதால் சமீபகாலமாக காற்று மாசு அதிகரித்துள்ளது. இந்நிலையில் காற்று மாசு குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த விசாரணையின்போது, காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த முழுப் பொதுமுடக்கத்தை அமல்படுத்த தயாராக இருப்பதாக டெல்லி அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நீதிபதிகள் பேசுகையில், முழுப் பொதுமுடக்கத்தை டெல்லி புறநகர் பகுதிகளான அண்டை மாநிலங்களிலும் அமல்படுத்தினால் மட்டுமே காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த முடியும் எனப் பரிந்துரை செய்துள்ளது. இதற்கிடையே, மத்திய அரசுத் தரப்பில் தெரிவித்திருப்பதாவது, "வடமாநிலங்கள் பயிர்க்கழிவுகள் எரிப்பதால் டெல்லியில் 10 சதவீதம்தான் காற்று மாசு ஏற்படுகிறது. மேலும், காற்று மாசை கட்டுப்படுத்த ஒருநாள்விட்டு ஒருநாள் வாகனம் இயக்கும் திட்டம், டெல்லிக்குள் நுழைய கண்டெய்னர் லாரிகளுக்கு தடை மற்றும் கடுமையான பொதுமுடக்கம் ஆகிய மூன்று பரிந்துரைகளை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.”


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory