» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

புதன் 20, அக்டோபர் 2021 11:06:46 AM (IST)

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றோர் இன்று பதவியேற்கவுள்ள நிலையில், பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்தி ட்வீட் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் கட்சிக்காரர்களை நான் வாழ்த்த விரும்புகிறேன். எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நன்றி.அருமையான தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் கட்சிக்காரர்களை நான் வாழ்த்த விரும்புகிறேன். எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நன்றி. அருமையான தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைப்போம். https://t.co/xJNjD0A12O

முன்னதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற 9 மாவட்டங்களைச் சேர்ந்த 8 யூனியன் கவுன்சிலர்கள், 41 பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் 381 வார்டு உறுப்பினர்களை நேரில் சந்தித்தேன் என்று பதிவிட்டிருந்தார். அதில் தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவியையும் டேக் செய்திருந்தார். #381பாஜக என்ற ஹேஷ்டேகைப் பயன்படுத்தி அவர் இந்த ட்வீட்டை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று காலை அந்த ட்வீட்டிற்கு தமிழில் பதிலளித்துள்ளார். தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், அக்.6 மற்றும்9-ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடந்தது. அத்துடன், 28 மாவட்டங்களில் காலியாக இருந்த உள்ளாட்சி பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து12-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்தத் தேர்தல்களில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவியிடங்களுக்கு போட்டியின்றி மற்றும் போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் அக்.20-ம் தேதி (இன்று) காலை 10 மணிக்கு தொடர்புடைய தேர்தல்நடத்தும் அலுவலர்கள் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் அந்தந்த மாவட்ட ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் கிராம ஊராட்சி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது.

எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் அனைவரும் 20-ம்தேதி காலை 10 மணிக்கு அந்தந்தஊராட்சி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்கின்றனர். பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டவர்கள் மட்டும் 22-ம் தேதி நடக்கவுள்ள மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடவோ அல்லது பங்களிக்கவோ, வாக்களிக்கவோ தகுதியுடையவர் ஆவர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory