» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனா காலத்தில் ஆக்சிஜன் ஏற்றுமதியால் பலி உயர்வு - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

புதன் 21, ஜூலை 2021 4:59:17 PM (IST)

கரோனா காலத்தில் ஆக்சிஜன் ஏற்றுமதி 700 சதவிகிதம் அதிகபடுத்தியதன் காரணமாகவே பலி எண்ணிக்கை உயர்ந்ததாக பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக யாரும் உயிரிழக்கவில்லை, இது குறித்த தரவுகள் யாவும் அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரேதச அரசுகள் வழங்கியவை என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், உத்தர பிரதேச மாநில பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

ஆக்சிஜன் பற்றாக்குறை யாரும் உயிரிழக்கவில்லை என மத்திய கூறுகிறது. ஆனால், கரோனா 2 வது அலையில்  ஆக்சிஜன் ஏற்றுமதி 700 சதவிகிதம் உயர்த்தப்பட்டதன் விளைவாகவே உயிரிழப்பு நிகழ்ந்தது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் ஆலைகளை ஏற்படுத்த எந்த முன்னெடுப்பும் மேற்கொள்ளப்படவில்லை. ஆக்சிஜனை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்த செல்ல டாங்கர்கள் ஏற்பாடு செய்யப்படவில்லை என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory