» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மாநிலங்கள் இடையே ஆக்சிஜனை கொண்டு செல்ல தடை இல்லை : மத்திய அரசு உத்தரவு

வியாழன் 22, ஏப்ரல் 2021 4:54:40 PM (IST)

கரோனாவின் 2வது அலையை கருத்தில் கொண்டு தடையில்லா ஆக்சிஜன் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாடு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமனைகளுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட சுகாதார அவசர நிலை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.

இந்நிலையில், மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், மருத்துவ ஆக்சிஜனை ஒரு மாநிலத்தில் இருந்து, மற்றொரு மாநிலத்திற்கு கொண்டு செல்ல தடை இருக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. ஆக்சிஜன் கொண்டு செல்லும் வாகனங்களை அதிகாரிகள் தடுக்கக் கூடாது, அந்த வாகனங்களுக்கு நேர கட்டுப்பாடு உட்பட எந்த தடையும் விதிக்கக்கூடாது  என்றும் கூறி உள்ளது. கரோனாவின் 2வது அலையை கருத்தில் கொண்டு தடையில்லா ஆக்சிஜன் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThalir Products

Black Forest Cakes
Nalam PasumaiyagamThoothukudi Business Directory