» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனா தொற்றால் சீதாராம் யெச்சூரியின் மகன் காலமானார் : பிரதமர் மோடி இரங்கல்

வியாழன் 22, ஏப்ரல் 2021 10:34:44 AM (IST)

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மகன் ஆசிஷ் யெச்சூரி கரோனா தொற்றின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 34.

இது தொடர்பாக சீதாராம் யெச்சூரி தனது ட்விட்டர் பக்கத்தில், "கரோனா தொற்றுக்கு எனது மூத்த மகன் ஆஷிஷ் யெச்சூரியை இழந்துவிட்டேன் என்பதை மிகுந்த வேதனையோடு தெரிவித்துக் கொள்கிறேன். கடினமான நேரத்தில் எங்களுக்கு நம்பிக்கை ஊட்டிய அனைவருக்கும், என் மகனுக்கு சிகிச்சையளித்த் மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

யெச்சூரியின் மகன் மறைவுக்கு ட்விட்டரில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். டெல்லி குர்கானில் தனியார் மருத்துவமனையில் 2 வாரங்களுக்கும் மேலாக ஆசிஷ் யெச்சூரி சிகிச்சை பெற்றுவந்தார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருந்ததாகக் கருதப்பட்ட நிலையில் இன்று காலை 5.30 மணியளவில் அவர் திடீரென உயிரிழந்தார். அவரது மறைவு குடும்பத்தினர், நண்பர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஆசிஷ், டெல்லியில் உள்ள பத்திரிகை ஒன்றில் பணியாற்றிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மு.க. ஸ்டாலின் இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மகனின் இறப்புக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஆஷிஷ் யெச்சூரியின் மறைவு செய்தி மிகுந்த வலியையும் வேதனையையும் அளிக்கிறது. இந்தக் கடினமான நேரத்தில் சீதாராம் யெச்சூரிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


மக்கள் கருத்து

adminApr 22, 2021 - 10:55:08 AM | Posted IP 173.2*****

அந்த ஆளு ஊசி போட்டாறான்னு பாத்து சொல்லுங்க.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Thalir Products


Nalam PasumaiyagamThoothukudi Business Directory