» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கோவிஷீல்டு தடுப்பூசி விலையை இரு மடங்காக உயர்த்தியது சீரம் நிறுவனம்!!

புதன் 21, ஏப்ரல் 2021 5:13:56 PM (IST)கரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை இரு மடங்காக சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனம் உயர்த்தியுள்ளது.

மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு என தனித்தனியாக விலையை நிர்ணயித்தும், அமெரிக்கா, ரஷ்யா, சீனாவில் விற்பனையாகும் கரோனா தடுப்பூசியின் விலைகளை ஒப்பிட்டும் இந்த புதிய விலைப்பட்டியலை சீரம் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மத்திய அரசு வெளியிட்டிருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, விலை உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் எங்களது ஒட்டுமொத்தத் உற்பத்தியில் 50 சதவீத உற்பத்தியை மத்திய அரசு செயல்படுத்தும் கரோனா தடுப்பூசி திட்டத்துக்கும், 50 சதவீத உற்பத்தியை மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது விற்கப்படும் கரோனா மருந்தான கோவிஷீல்டு தடுப்பூசி விலை இருமடங்கு அதிகரித்துள்ளது. ஏற்கனவே ஒரு டோஸ் கோவிஷீல்டு ரூ.250க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இனி, தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் கோவிஷீல்டு ரூ.600க்கும், மாநில அரசுகளுக்கு ரூ.400 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது தனியார் மருத்துவமனைகளில் கோவிஷீல்டு தடுப்பூசி ரூ.250-க்கும், அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும் போடப்படுகிறது. சீரம் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அமெரிக்காவில் கரோனா தடுப்பூசி ஒரு டோஸ் ரூ.1500க்கும், ரஷ்யாவில் ரூ.750-க்கும், சீனாவில் ரூ.750க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் உலகளவில் மிகக் குறைந்த விலையில் இந்தியாவில் கரோனா தடுப்பு மருந்து விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

truthApr 22, 2021 - 09:57:38 AM | Posted IP 162.1*****

Paravayilayae, nammalai america, china and Russia level ikku super power aakki vittargal. Inni ellorum dollar ill than salary vaanganum. minimum 5000 dollars kaekannum.

loosuApr 21, 2021 - 05:59:57 PM | Posted IP 108.1*****

nalla irukuda unga business. naa unga oosi podala

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Nalam Pasumaiyagam
Thalir Products

Thoothukudi Business Directory