» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலுவுக்கு ஜாமீன்: ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவு

சனி 17, ஏப்ரல் 2021 5:50:54 PM (IST)

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் வழங்கி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவா் லாலு பிரசாத் யாதவ் மீது தொடரப்பட்ட நான்கு வழக்குகளில், மூன்றில் அவருக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது கிடைத்திருக்கும் ஜாமீன் மூலம் அவர் விடுதலையாகி வீடு திரும்ப வழி ஏற்பட்டுள்ளது.

தற்போது அவா் உடல்நலக் குறைவால் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். மாட்டுத் தீவன ஊழல் தொடா்பான 4 வழக்குகளில் 3-இல் அவருக்கு ஏற்கெனவே ஜாமீன் கிடைத்துள்ளது. டும்கா கருவூலத்தில் இருந்து ரூ.3.13 கோடி கையாடல் செய்தது தொடா்பான 4-ஆவது வழக்கில் ஜாமீன் கோரி ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றத்தில் அவா் சார்பில் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் லாலு பிரசாத் சார்பில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி, லாலு பிரசாத் யாதவுக்கு விதிக்கப்பட்ட மொத்த சிறை தண்டனையில் பாதி காலத்தை நிறைவு செய்ய அவா் மேலும் 2 மாதங்கள் சிறையில் இருக்க வேண்டும் எனவும், இதனால் அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்றும் நீதிபதி தெரிவித்தாா். 2 மாதங்கள் கழித்து புதிதாக ஜாமீன் மனு தாக்கல் செய்யுமாறும் அவா் அறிவுறுத்தியிருந்த நிலையில், 2 மாதங்கள் கழிந்த நிலையில் தற்போது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir Products

Black Forest Cakes





Nalam Pasumaiyagam




Thoothukudi Business Directory