» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!

வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)



நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளியில் சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கான மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம் நடந்தது. 

விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கென்னடி வேதராஜ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர் நாசரேத் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தரம் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாரத்தான் ஓட்டப் பள்ளியில் இருந்து புறப்பட்டு பிரகாசபுரம், மூக்குப்பீறி மற்றும் முக்கிய வீதி வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது.

இதில் நாசரேத் காவல் நிலைய தலைமை காவலர்கள் வேல்பாண்டியன், நாராயணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் வழக்கறிஞர் பிரபாகர், தலைமை ஆசிரியர் கென்னடி, உடற்கல்வி ஆசிரியர்கள் பிரைட்டன் ஜோயல், ஜாஸ்மின் ஏஞ்சல் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory