» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாட்டார்குளம் பள்ளியில் திருக்குறள் திருப்பணிகள் தொடர் பயிற்சி வகுப்பு பயிலரங்கம்

செவ்வாய் 4, நவம்பர் 2025 4:50:43 PM (IST)



செய்துங்கநல்லூர்அருகில் உள்ள நாட்டார்குளம் ஜோஸ் மெட்ரிகுலேசன் மேல் நிலைப்பள்ளியில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் திருக்குறள் திருப்பணிகள் தொடர பயிற்சி வகுப்பு பயிலரங்கம் நடந்தது.

திருக்குறள் கண்காணிப்புக்குழு உறுப்பினர் மற்றும் பயிலரங்க குழுத் தலைவர் முத்தாலங்குறிச்சி காமராசு தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ஜெய்தூண் பீவி முன்னிலை வகித்தார். கோபாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். பயிற்சியாளராக அனவரதநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் துரைப்பாண்டியன், எழுத்தாளர்கள் காயல் அருள், தூத்துக்குடி மாரிமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில் திருக்குறள் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த சதீரா சுல்தானா, இபுராஹீம், பம்மியா, ஆசியா, பூர்ண சிவானி, அக்ஷயா ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் காளிமுத்து, ஆசிரியைகள் அருள்செல்வி, டெம்பி அருள்டா உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆசிரியை அங்கயர் கன்னி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory