» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

பண்டாரம்பட்டி தொடக்கப்பள்ளியில் புதிய பயணத்தின் புன்னகை நாள் விழா

திங்கள் 6, அக்டோபர் 2025 12:24:33 PM (IST)



தூத்துக்குடி, பண்டாரம்பட்டி தூ.நா.தி.அ.க. தொடக்கப்பள்ளியில் 2025-2026 கல்வி ஆண்டின் இரண்டாம் பருவ தொடக்க நிகழ்ச்சியாக புதிய பயணத்தின் புன்னகை நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 

விழாவிற்கு பள்ளியின் தாளாளர் அருள்திரு ஜெபஸ்டின் தங்கபாண்டி தலைமை தாங்கினார். ரீத்தம்மாள்புரம் பங்கின் அருள்தந்தை அத்தனாசியூஸ் ஜோ மற்றும் லயன் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் நல்லாசிரியர் நெல்சன் பொன்ராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். 

இரண்டாம் பருவ தொடக்க நாளில் புன்னகை பூத்த முத்துடன் பள்ளிக்கு வருகை தந்த அனைத்து மாணவ மாணவியருக்கும் பள்ளியின் தாளாளர் அருள்திரு ஜெபஸ்டின் தங்கபாண்டி மாணவர்களை வாழ்த்தி ஆசி வழங்கினார். 

மாணவர்களுக்கு சால்வை அணிவித்தும், மலர் கொடுத்தும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அருள்தந்தை அத்தனாசியூஸ் ஜோ தேசியக் கொடி ஏற்றுவித்து சிறப்புரை ஆற்றினார். பள்ளியின் தாளாளர் ஆசி கூற விழா இனிதே நிறைவுற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை நல்லாசிரியர் நெல்சன் பொன்ராஜ் ஏற்பாடு செய்திருந்தார். பெற்றோர் அனைவரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory