» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தமிழில் 100 மதிப்பெண்கள் எடுத்தால் 10ஆயிரம் ஊக்கத்தொகை : அன்பில் மகேஷ் அறிவிப்பு
சனி 20, செப்டம்பர் 2025 3:32:53 PM (IST)

பொதுத் தேர்வில் தமிழில் 100 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
சென்னையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது: "பள்ளிக்கல்வித் துறை தன்னுடைய இலக்கை தாண்டி உழைத்து வருகிறது. பள்ளிக்கல்வித் துறை கட்டடங்கள் சாதியை ஒழிக்கும் கட்டடங்கள்..அன்புக் கரங்கள் மூலம் பல சிறப்பான திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகின்றன. 2,715 பட்டதாரி ஆசிரியர்கள் எங்களது பள்ளிக்கல்வித் துறை குடும்பத்தில் இணைந்துள்ளனர். கல்வி, சுகாதாரத்தை இரு கண்களாக கருதி முதல் அமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.
பொதுத் தேர்வில் தமிழில் 100 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.ஆசிரியர்களே 6 மாதத்தில் உங்களுக்கு பொதுத் தேர்வு வந்துவிடும். எங்களுக்கு பொதுத் தேர்தல் வந்துவிடும். நீங்களும் வெற்றி பெற வேண்டும், நாங்களும் வெற்றி பெற வேண்டும். நான் அரசியல் பேசவில்லை. அறிவு சார்ந்த விஷயத்தை கொண்டு செல்வதற்காகவே இங்கு பேசுகிறேன்" என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)

நாட்டார்குளம் பள்ளியில் திருக்குறள் திருப்பணிகள் தொடர் பயிற்சி வகுப்பு பயிலரங்கம்
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:50:43 PM (IST)

குழந்தைகள் அறிவியல் மாநாடு: ஆட்சியர் துவக்கி வைத்தார்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:48:06 PM (IST)


