» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

சர்வதேச கடலோர தூய்மைப்படுத்தும் தினம்: சாரண, சாரணிய இயக்கத்தினர் பங்கேற்பு

சனி 20, செப்டம்பர் 2025 3:08:00 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் பாரத சாரண, சாரணிய இயக்கம் சார்பில் ன் கடற்கரைப் பகுதிகளில் தூய்மைப் பணி நடைப்பெற்றது.

சர்வதேச கடலோர தூய்மைப்படுத்தும் தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் மூன்றாவது சனிக்கிழமை உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதனை செயல்படுத்தும் விதமாக தூத்துக்குடி மாவட்டத்தின் கடற்கரைப் பகுதியை சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்கும் நோக்கத்துடன் பாரத சாரண, சாரணிய இயக்கம் சார்பில் தூய்மைப் பணி இன்று நடைப்பெற்றது.

கடற்கரை தூய்மைப் பணியினை சாரண, சாரணிய இயக்கச் செயலாளர் செ.எட்வர்ட் ஜாண்சன் பால், மாநில உதவி ஆணையரும், மாவட்டப் பயிற்சி ஆணையருமான ஆ.ஜெயாசண்முகம், மாவட்ட சாரண ஆணையர் பி.சரவணன், விக்டோரியா சிபிஎஸ்இ பள்ளியின் முதல்வர் ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்து தூய்மைப் பணியினை தொடங்கி வைத்தனர். மாநகராட்சி ஆணையர்பிரியங்கா சாரண, சாரணியர்களின் தூய்மைப் பணியினை பார்வையிட்டார்.

நிறைவாக மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு கடற்கரை ஓரம் மரங்களை நட்டு வைத்து சாரண, சாரணியர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டிற்கு அருகிலும் மரங்களை நட்டு வைத்து பாதுகாப்பதன் மூலம் இயற்கையை நல்ல பாதுகாக்க முடியும் என்று கூறினார்.கடற்கரை தூய்மைப் பணியில் சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளி, ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, விக்டோரியா சிபிஎஸ்இ பள்ளி, புனித லசால் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளிலிருந்து சாரண, சாரணியர்கள் மற்றும் பொறுப்பாசிரியர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory