» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

அண்ணா பிறந்தநாள் பேச்சு போட்டி : மாணவ, மாணவிகள் ஆர்வம்!

வெள்ளி 12, செப்டம்பர் 2025 8:33:57 PM (IST)

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில்  தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி அன்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன.

பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் மில்லர்புரம் பிஎம்சி பதின்ம மேல்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவன் தமிழ்குமரன் முதல் பரிசுக்கும் தோழப்பன் பண்ணை அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி மீனா இரண்டாம் பரிசும், தூத்துக்குடி எக்ஸ் அண்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி ஸ்ரீ பேபி ஷா மூன்றாம் பரிசுக்கும் தேர்வு செய்யப்பட்டனர்.

அரசு பள்ளி மாணவர்களுக்கான இரண்டு சிறப்பு பரிசுகள் வேப்பிலோடை அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி 11 ஆம் வகுப்பு மாணவி லதா மற்றும் தூத்துக்குடி மேலூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி 7 ஆம் வகுப்பு மாணவி ஷனா நஸ்மீன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.


கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் தூத்துக்குடி ஹோலி கிளாஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி இளங்கலை உளவியல் இரண்டாம் ஆண்டு மாணவி மரிய ரேச்சல் முதல் பரிசுக்கும் தூத்துக்குடி வ உ சி கல்வியில் கல்லூரி ஆங்கிலம் முதலாம் ஆண்டு மாணவி வசந்தகுமாரி இரண்டாம் பரிசு க்கும் தூத்துக்குடி தூய மரியன்னை மகளிர் கல்லூரி முதுகலை வேதியியல் இரண்டாம் ஆண்டு மாணவி அஸ்வர்னிஹா மூன்றாம் பரிசுக்கும் தேர்வு செய்யப்பட்டனர்
போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசு ரூபாய் 5000 இரண்டாம் பரிசு ரூபாய் 3000 மூன்றாம் பரிசு ரூபாய் 2000 மேலும் பள்ளி மாணவர்களுக்கென  நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் இருவருக்கும்  சிறப்பு பரிசு ரூபாய் 2000 வழங்கப்படும்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory