» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

பள்ளிகளுக்கு இடையேயான வினாடி-வினா போட்டி

செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 3:48:29 PM (IST)



தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் கல்லூரியில் இயற்பியல் துறை சார்பில், பள்ளிகளுக்கு இடையேயான வினாடி-வினா போட்டி போட்டி நடைபெற்றது. 

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் இயற்பியல் உதவிப் பேராசிரியர் பாலாஜி வினாடி வினா போட்டிகளை நடத்தினார். தலா இரண்டு பங்கேற்பாளர்கள் கொண்ட 16 அணிகளுக்கும் முதற்கட்ட எழுத்துத் தேர்வோடு தொடங்கியது, அதில் இருந்து முதல் ஐந்து அணிகள் மேடையில் நடைபெறும் வினாடி வினா போட்டிக்கு தகுதி பெற்றன. 

தி விகாசா பள்ளி முதலிடமும், அழகர் பப்ளிக் பள்ளி 2வது இடமும், ஸ்பிக் நகர் மேல்நிலைப் பள்ளி மூன்றாவது இடமும் பிடித்தன. இயற்பியல் துறைத் துணை முதல்வர் எழிலரசி வெற்றியாளர்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகளை வழங்கினார். முன்னதாக துறைத் தலைவர் லூகாஸ் ரெக்ஸ்செலின் வரவேற்பு உரை நிகழ்த்தினார். நிறைவாக இயற்பியல் உதவிப் பேராசிரியர் டாக்டர் ஷீபா நன்றியுரை வழங்கினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory