» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் சுதந்திர தின விழாவில் நாசரேத் பள்ளி மாணவர்கள் அசத்தல்!

திங்கள் 18, ஆகஸ்ட் 2025 10:50:38 AM (IST)



தூத்துக்குடி தருவை மைதானத்தில் 79வது சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பிரமிடு வடிவில் ஒருவர் மேல் ஒருவர் ஏறி நின்று அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தனர். 

இத்தகைய மனித பிரமிடு செய்து அசத்திய நாசரேத் மர்காஷிஸ் பள்ளி மாணவர்களை 79 வது சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உட்பட காண வந்த அனைவரும் பாராட்டினர்.
 
மேலும் தூத்துக்குடி சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு பிரமிடு செய்து காண்பித்த மாணவர்களையும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்களையும் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி நிர்வாகத்தின் சார்பாக தாளாளர் வழக்கறிஞர் பிரபாகரன் மற்றும் தலைமை ஆசிரியர் குணசீலராஜ் சார் ஆசிரியர்கள் அலுவலர்கள் பாராட்டினார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory