» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் பள்ளியில் இளையோர் செஞ்சிலுவை சங்க சிறப்பு நிகழ்ச்சி

ஞாயிறு 10, ஆகஸ்ட் 2025 1:08:37 PM (IST)



நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் இளையோர் செஞ்சிலுவை சங்க சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கல்வி இணைச் செயல்பாடுகள் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தலைமையாசிரியர் குணசீலராஜ் தலைமை தாங்கினார். இளையோர் செஞ்சிலுவை சங்க பொறுப்பாசிரியர் ஜென்னிங்ஸ் காமராஜ் வரவேற்றார். தாளாளர் வழக்கறிஞர் பிரபாகர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். 

அவர் பேசுகையில், செஞ்சிலுவை சங்கத்தின் குறிக்கோள்கள் அனைத்தையும் மாணவர்கள் பின்பற்ற வேண்டும், நாள்தோறும் உடல் நலம் பேணுதல் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் சிறப்பம்சங்களான சுகாதாரம், சேவை, நட்புறவு ஆகியவை குறித்து மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது.செஞ்சிலுவை சங்கத்தினை நிறுவிய ஹென்றி டுனான்ட் வரலாறு குறித்து மாணவர்கள் தெரிந்து கொண்டனர். 

செஞ்சிறுவை சங்கத்தின் முதன்மையான நோக்கமான மனிதாபிமான சேவைகளை அனைவருக்கும் வழங்குவது குறித்து மாணவர்களுக்கு கூறப்பட்டது. செஞ்சிலுவை சங்க பாடல் மாணவர்களுக்கு பாடி காண்பிக்கப்பட்டது. இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory