» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நாடகத் திருவிழா!

திங்கள் 28, ஜூலை 2025 8:47:17 PM (IST)



தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் கல்லூரி மற்றும் "வெக்கை கலை இலக்கிய பண்பாட்டு வெளி சார்பில் வெக்கை நாடகத் திருவிழா நடைபெற்றது.

காமராஜ் கல்லூரி முதல்வர்  கே.பானுமதி  தலைமையுரை ஆற்றினார். வெக்கை கலை இலக்கிய பண்பாட்டு வெளியின் பொறுப்பாளர்கள்  சுந்தர் காந்தி மற்றும்  கார்த்திக் ராஜேந்திரன் ஒருங்கே வரவேற்புரையும் நோக்கவுரையும் வழங்கினார்கள். வழக்கறிஞர் சொர்ணலதா  வாழ்த்துரை வழங்கினார்கள்.

பல்வேறு நாடக ஆளுமைகள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், கலை இலக்கிய விமர்சகர்களும் நிகழ்வில் கலந்து கொண்ட இந்நிகழ்வில், காலையில் நடந்த கருந்தரங்க நிகழ்வில் கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர். எல்.ராம்ராஜ்  "தமிழியல் அரங்க வடிவங்கள்” என்கிற தலைப்பிலும்,  கட்டியக்காரி நாடகக் குழுவின் நிறுவனர் நாடகக் கலைஞர் ஶ்ரீஜித் சுந்தரம்  "விளிம்புநிலை சமூகத்தை நோக்கிய சமகால அரங்கியல்" என்கிற தலைப்பிலும் கருத்துரை வழங்கினர்.

மதியம் தொடங்கிய நாடக அரங்கெற்ற நிகழ்வில் ஆகம் நாடக வெளி "நீடு துயில்” என்கிற நாடகத்தையும், ஈரோடு நாடகக் கொட்டகை நாடகக்குழு "உந்திச்சுழி" என்கிற நாடகத்தையும் நிகழ்த்தினார்கள். நடிகை ரேவதியின் "வெள்ளை மொழி" நாடகம், திகழ் நிகழ் கலைக்குழுவின் "4Play” நாடகம் மற்றும் புகிரி அரங்காட்டம் நாடகக்குழுவின் "நாற்காலி" நாடகமும் அரங்கேற்றப்பட்டது.

திரளாக கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும்  நிகழ்வில் கலந்து கொண்டு ஆர்வமுடன் நாடகங்களுக்கு இடையில் நடந்த கலந்துரையாடல்களில் ஆர்வமுடன் பங்கெடுத்தார்கள்.  நிறைவு விழாவில் கலை இலக்கிய விமர்சகர் பேராசிரியர்  அ. ராமசாமி  சிறப்புரை ஆற்ற, வெக்கை கலை இலக்கிய பண்பாட்டு வெளியின் ஒருங்கிணைப்பாளர் அன்புராஜ் நன்றியுரை வழங்கினார், நிகழ்ச்சி ஏற்பாடுகளை வெக்கை கலை இலக்கிய பண்பாட்டு வெளியின் ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திக் ராஜேந்திரன், சுந்தர் காந்தி, அன்புராஜ், அருண் பாண்டியன் ஆகியோர் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory