» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நீட் தேர்வில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவர் சாதனை

சனி 26, ஜூலை 2025 8:32:59 AM (IST)



நீட் தேர்வில் வெற்றி பெற்று திருச்செந்தூர் அருள்மிகு செந்தில் ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் சாதனை படைத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் நகராட்சி ராமசாமிபுரத்தைச் சேர்ந்த பனைத் தொழிலாளி பரமசிவன் - விஜயரதி தம்பதி மகன் செல்வ சதீஷ். திருச்செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த இவர், கடந்த 2022-23ஆம் ஆண்டு பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றார். தொடர்ந்து இரு ஆண்டுகள் பயிற்சி பெற்று நீட் தேர்வுக்கு எழுதினார். அதில் 720-க்கு 480 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார்.

மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 உள் ஒதுக்கீட்டில் மாநில அளவில் முதல் 10 இடங்களில் இடம் பிடித்தார். அவருக்கு, திருச்செந்தூர் அரசுப் பள்ளியின் பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் ஆனந்த ராமச்சந்திரன், மேலாண்மைக் குழு தலைவர் பிச்சம்மாள் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory