» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாகலாபுரம் பள்ளியில் ஆங்கிலப் பயிற்சி முகாம்!

வியாழன் 8, மே 2025 8:07:28 AM (IST)



நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வந்த இலவச யோகா மற்றும்  ஆங்கிலப் பயிற்சி முகாம் நிறைவு பெற்றது. 

நிறைவு விழாவில் 40 மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. உறவின் முறைத் தலைவர், உறவின்முறைச் செயலர், பள்ளி நிர்வாகக்குழுத் தலைவர் மற்றும் செயலர் கலந்து கொண்டனர்.அனைத்து மாணவர்களுக்குமான ஊக்கப்பரிசுகளின் செலவினங்களை உறவின் முறைத்தலைவர் மாரி கண்ணபிரான் ஏற்றுக் கொண்டார். வகுப்பு எடுத்த ஆசிரியர்கள் ஜான் ஸ்டேனி, ச.ரமேஷ், வே.குணசேகரன், ப.கவிதா, வெ.நர்மதா ஆகியோருக்கு நிர்வாகம் சார்பில் பொன்னாடை வழங்கப்பட்டன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory