» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
என்.எம்.எம்.எஸ். தகுதித் தேர்வு: புனித அன்னாள் பள்ளி மாணவர்கள் சாதனை!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 10:16:44 AM (IST)

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள கீழராமசாமியாபுரம் புனித அன்னாள் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் என்.எம்.எம்.எஸ். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.
மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைத் திட்டத்தின் (என்.எம்.எம்.எஸ்.) கீழ் அரசு, அரசு உதவி பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் மாணவர்களுக்கு என்.எம்.எம்.எஸ். தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தேர்வின் மூலம் தமிழகத்தில் 6,695 பேர் உட்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான என்.எம்.எம்.எஸ். தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 22-ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வில் மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர்.
இதில் கீழராமசாமியாபுரம், புனித அன்னாள் உயர்நிலைப் பள்ளி மாணவி அ. பெல்சிட்டா கரோலின் தேசிய திறனாய்வுத் தேர்விலும், இ.ஜோயல் எண்ற மாணவன், கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஊரகத் திறனாய்வுத் தேர்விலும் தேர்ச்சிப் பெற்று சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவர்களைப் பள்ளி தாளாளர் அருட்தந்தை ஜோசப் ஸ்டாலின், தலைமையாசிரியர் ஸ்டாலின் மற்றும் ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)

நாட்டார்குளம் பள்ளியில் திருக்குறள் திருப்பணிகள் தொடர் பயிற்சி வகுப்பு பயிலரங்கம்
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:50:43 PM (IST)

குழந்தைகள் அறிவியல் மாநாடு: ஆட்சியர் துவக்கி வைத்தார்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:48:06 PM (IST)


