» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் விளையாட்டு விழா

சனி 15, பிப்ரவரி 2025 4:53:25 PM (IST)



தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது. 

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் விளையாட்டு விழா இன்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அருட்சகோதரி ரூபா, துணை முதலவர் மதுரவல்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் ஷெரின் கவீஜா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். 

சிறப்பு விருந்தினராக சாகுபுரம் தாரங்கதாரா கெமிக்கல் நிறுவனத்தின் முத்த நிர்வாகி ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டு மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ள, கல்லூரி விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் ஜோதியை ஏந்தி வர சிறப்பு விருந்தினர் விளையாட்டு விழாவைத் தொடங்கி வைத்தார். மாணவிகளின் பிரமிட், ஏரோபிக் நடனம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. பச்சை வர்ணக் குழு மொத்த சாம்பியன்ஷிப் விருது பெற்று எல்லோருடைய பாராட்டையும் பெற்றனர். 

சிறப்பு விருந்தினர் தன்னுடைய சிறப்புரையில் மாணவிகளுக்கு விளையாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலும், இன்றைய மாணவ, மாணவியர் மத்தியல் கைப்பேசி மற்றும் சமூக ஊடகத்தின் தாக்கம் மிக அதிகமாகிவிட்டதால், விளையாட்டின் மீது ஆர்வம் குறைந்துவருவதால், இது போன்ற விளையாட்டுப் போட்டியில், இந்த விளையாட்டு ஆர்வத்தை தூண்டி வளர்க்க மிகவும் உதவியாக அமையும் என்று கூறினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்களும், கேடயங்கள் மற்றும் வெள்ளி பதக்கங்களையும் வழங்கி பாராட்டினார். 

பேராசிரியர்களுக்கும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழா நிறைவில் ஆடை வடிவமைப்பு துறை உதவி பேராசிரியர் ஜாய் மேரி நன்றி கூறினார். விளையாட்டுப் போட்டிகளை கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் தங்கமலர் ஏற்பாடு செய்திருந்தார். இவ்விழாவில் தூத்துக்குடி ஹோலிகிராஸ் ஹோம் சயின்ஸ் பள்ளி தலைமை ஆசிரியை சரத்மேரி மற்றும் விளையாட்டு பயிற்சியாளர்கள் அ. ரமேஷ், ஆர். ஜார்ஜ் எஸ்டர், ஆர். புஷ்பராஜ் பால் ஆசிர், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory