» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி பள்ளியில் கொய்யா மரக்கன்றுகள் வழங்கும் விழா

வெள்ளி 14, பிப்ரவரி 2025 8:36:45 PM (IST)



தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு 500 நாட்டு கொய்யா மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. 

தூத்துக்குடி மில்லர்புரம் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் இந்து எண்டர்பிரைசஸ் உரிமையாளர் பசுமை ஆர்வலர் ஆசைத்தம்பி முயற்சியில் மற்றும் ஆல்கேன் டிரஸ்ட் சார்பாக புனித தலைமை ஆசிரியர் மரியஜோசப் தலைமையில் அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல் முன்னிலையில் 500 நாட்டு கொய்யா மரக்கன்றுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல் வாழ்வு சங்க மாநில தலைவர் மற்றும் முன்னாள் மாணவர் மருதப்பெருமாள், மற்றும் டிரஸ்ட் உறுப்பினர்கள் பேச்சி முத்து, தினேஷ், கேசவன், செந்தில், பாலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory