» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் பாராட்டு விழா!
சனி 8, பிப்ரவரி 2025 8:37:06 AM (IST)

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் குணசீலராஜ் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தூத்துக்குடி நாசரேத் திருமண்டல, உயர்நிலை, மேல்நிலை மற்றும் சிறப்பு பள்ளிகளின் மேலாளரும், நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியின் தாளாளருமான ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி முருகையா கலந்து கொண்டு, மாணவர்களுக்கு வெற்றிக் கோப்பை, சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி சிறப்பித்தார்.
தமிழ் நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தூத்துக்குடி மாவட்டத்தில் முதலிடம் பெற்று, மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் பங்கு பெற்ற ஒன்பதாம் வகுப்பு மாணவர் முத்துக்குமார், மற்றும் திருச்செந்தூர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான நீளம் தாண்டுதல் போட்டியில் மூன்றாம் இடம் பெற்ற 11ம் வகுப்பு மாணவர் ஜோயல் ராஜ், 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மூன்றாம் இடம் பெற்ற 11ம் வகுப்பு மாணவர் வெங்கடேஷ் ஆகியோருக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி, கபடி போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற கபடி வீரர்களுக்கு பரிசு கோப்பை, பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பாராட்டு விழா நிகழ்ச்சியில், உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர், உடற்கல்வி ஆசிரியர் தனபால், கபடி பயிற்சியாளர் தீபன், இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ், ஓவியக்கலை ஆசிரியர் அலெக்சன் கிறிஸ்டோபர் ஆகியோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களை, பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரி சார்பில் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சனி 8, மார்ச் 2025 5:22:04 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் அறிவியல் மன்றவிழா : மாணவர்கள் அசத்தல்!
சனி 8, மார்ச் 2025 4:43:30 PM (IST)

தூத்துக்குடி திருச்சிலுவை ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா
ஞாயிறு 2, மார்ச் 2025 11:44:25 AM (IST)

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
வெள்ளி 21, பிப்ரவரி 2025 3:18:31 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம்!
வியாழன் 20, பிப்ரவரி 2025 5:51:03 PM (IST)

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: அழகர் பப்ளிக் பள்ளி அணி வெற்றி
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:08:36 PM (IST)
