» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

கீதா மெட்ரிக்மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

திங்கள் 3, பிப்ரவரி 2025 8:44:04 PM (IST)

தூத்துக்குடியில் கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில் அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

தூத்துக்குடி,போல்பேட்டையில் செயல்படும் கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 20வது ஆண்டு விழா நடந்தது. பள்ளிச் செயலாளர் ஜீவன்ஜேக்கப் வரவேற்றார். தலைமை ஆசிரியர் ஜெஸிந்தா ஆண்டறிக்கை வாசித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக வடக்கு மாவட்ட செயலாளரும் சமூ கநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

விழாவில் பள்ளி நிர்வாககுழு உறுப்பினர்கள் சுதன்கீலா, டாக்டர் மகிழ் ஜான் சந்தோஷ், கீர்த்தனா, சுதாசுதன், ஜீனா, மற்றும் ஆசிரியர்கள், அலுவலர் கள், மாணவ-மாணவிகள், பெற்றோர் என ஏராளமா னோர் கலந்துகொண்டனர். நிறைவாக ஆசிரியர் காளிஸ்வரி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory