» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

புத்தகம் வாசிப்பை ஊக்கப்படுத்துதல் நிகழ்ச்சி!

செவ்வாய் 7, ஜனவரி 2025 3:43:23 PM (IST)



தூத்துக்குடி ஆரோக்கியபுரம் விவிடி நினைவு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு புத்தகம் வாசிப்பை ஊக்கப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

புத்தகம் வாசிப்பு நற்பணி மன்றம் சார்பில்  நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் ஜெயவேணி தலைமை வகித்தார். மில்லர்புரம் சலூன் நூலகர் பொன்மாரியப்பன் நல்ல எழுத்தாளா்கள் எழுதிய புத்தகங்களை வாசிப்பதால் நாம் முன்னேற்றம் அடையலாம் என்று சிறப்புரையாற்றினார். சமுக ஆர்வலர் லாரன்ஸ் பாடப்பத்தகங்களை தான்டி தினமும் நாளிதழ் மற்றும் புத்தகங்களை வாசித்து உலகை தெரிந்து கொள்ளலாம் என்றாா். இதில், 5 ஆம் வகுப்பு மாணவ , மாணவியா்கள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory